தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 2-வது மாநில மாநாடு மே 16-ம் தேதி விருதுநகரில் துவங்கியது. கருமாத்தூர் நத்தப்பட்டியிலிருந்து வெள்ளியன்று துவங்கிய தோழர் எம்.தங்கராஜ் நினைவு ஜோதிக்குகருமாத்தூர் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. சனிக்கிழமையன்று காலை 8 மணியளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டக்குழு சார்பில் பழங்காநத்தத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்டக்குழு உறுப்பினர் சசிகலா தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், முன்னணியின் நிர்வாகிகள் எஸ்.கே.பொன்னுத்தாய், மா.கணேசன், எம்.பாலசுப்ரமணியன், த.செல்லக்கண்ணு ஆகியோர் பேசினர். மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம், மாமன்ற உறுப்பினர் செல்லம், பா.விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்டனர். சிபிஎம் மதுரை புறநகர் மாவட்டக்குழு சார்பில் திருமங்கலத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு திருமங்கலம் ஒன்றியச் செயலாளர் பி.தேவராஜ் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.தேவராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.பூமிநாதன், சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் பொன்கிருஷ்ணன், மாதர் சங்க புறநகர் மாவட்டச் செயலாளர் சி.முத்துராணி மற்றும் வெகுஜன அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.